வீடியோ!! ”பதான் ” பேனர்கள், போஸ்டர்கள் கிழிப்பு!! திரையிடப்பட்டால் போராட்டம் தீவிரமாகும் !! பஜ்ரங்தள் எச்சரிக்கை!!

 
பதான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடிகை தீபிகா படுகோனின் நடிப்பில் உருவான  ’பதான் ‘ திரைப்படம் ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக தயாராக இருக்கிறது.இந்நிலையில் இந்த படத்திற்கு தொடர் எதிர்ப்புக்களும் , சர்ச்சைகளும் அதிகரித்து வருகின்றன. . இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'பேஷரம் ரங்' பாடல் காட்சியில், தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்த புகைப்படம், நடனம் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.


இதனையடுத்து இந்து துறவிகள், சாமியார்கள் அணியும் காவி நிற உடையை அணிந்து இதுபோன்று நடனம் ஆடலாமா என இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்புக்களையும், கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வஸ்திராப்பூர் பகுதியில் பதான் பட விளம்பர நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், ஆல்பா ஒன் மாலில் நடந்த நிகழ்ச்சியின்போது, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஒரு பிரிவினரான பஜ்ரங்தள அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் உள்ளே புகுந்தனர்.

பதான்
அவர்கள் படத்தில் நடித்துள்ள நடிகர் ஷாருக்கான், பிற நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள், போஸ்டர்கள், பெரிய அளவிலான கட்-அவுட்டுகள் அனைத்தையும்  கிழித்து, வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த படம் திரையிடப்பட்டால், இதனை விட கடுமையான போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்  அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர். இந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து இந்து ஜாக்ரன் மஞ்ச் தலைவர் ஜெகதீஷ் காத்ரி கூறுகையில், “பதான் படம் வெளியானால் கடும் போராட்டம் நடத்தப்படும். இன்று படம் வெளியாகாதது குறித்து ஐநாக்ஸ் திரையரங்க நிர்வாகத்திடம் மெமோராண்டம் கொடுத்துள்ளோம் ” என்றார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web