வீடியோ!! பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

 
பொன்னியின் செல்வன்

தமிழ் நாவல்களில் எழுத்தாளர் கல்கியின் படைப்பில் உருவான பொன்னியின் செல்வன் காலத்தால் அழியாதது. இதனை திரையில் கொண்டு வரும் முயற்சிகள் பல முறை தமிழ் சினிமாவில் நடைபெற்று தற்போது  இயக்குனர் மணிரத்னத்தால் அது சாத்தியமாகியுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக உருவாக்கப்பட்டு இதில் முதல் பாகம் செப்டம்பர் 30 தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.இந்த திரைப்படம் லைக்கா நிறுவனம் தயாரிப்பில்  ஏ.ஆர்.ரகுமான் இசையில்  உருவான படம் . இதுவரை  உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை அடுத்து இரண்டாவது பாகத்திற்கான வேலைகள்  வேகமாக நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில்  பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதனை தயாரிப்பு நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  அதன்படி, பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 2023 ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு இப்போதிருந்தே அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்பு தேதியை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web