விடிஞ்சா கல்யாணம்.. அர்த்தராத்திரியில் மணமகளுக்கு டார்ச்சர்! தூக்கில் தொங்கிய இளம்பெண்!

 
ரவளி

காலம் என்ன கணக்கு வைத்திருக்கிறது என்பது ஒவ்வொரு விநாடியும் எதிர்பாராத திருப்பம் தான். பெற்று, வளர்த்து ஆளாக்கி திருமணத்துக்கு நிச்சயம் செய்து, தடபுடலாக ஏற்பாடு செய்திருந்த பெற்றோர்கள், மகளின் இறுதி முடிவு கண்டு நொறுங்கி போனார்கள். 

தெலுங்கானா மாநிலம் நவிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவளி. 22 வயதான ரவளிக்கும் அதே பகுதியை சேர்ந்தவர் சந்தோஷூக்கும் இரு குடும்பத்தினரும் பேசி, நிச்சயித்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். நேற்று இருவருக்கும் திருமணமாகி இருக்க வேண்டும். நேற்று முன்தினம் மாலை மெகந்தி நிகழ்ச்சி தடபுடலாக நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் என களை கட்டியது நிகழ்ச்சி. மணப்பெண் ரவளியின் தோழிகள்,மேடையிலேயே நடனமாடினார்கள். அவர்களை பார்த்ததுமே, உற்சாகத்தில் மணப்பெண் ரவளியும் தோழிகளுடன் சேர்ந்து நடனமாடினார். நிகழ்ச்சியின் மொத்த அட்ராக்‌ஷனுமே ரவளியாக இருந்தார். மொத்த திருஷ்டியும் ரவளி மீது விழுந்திருக்கும் போல. விடிஞ்சா கல்யாணம். அன்றைய இரவே தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டார் ரவளி.

ரவளி

இத்தனைக்கும் அன்றைய இரவு சந்தோஷ், ரவளி என இருவருமே சந்தோஷமாக விருந்து சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, அவரவர் அறைக்கு திரும்பினார்கள். முகூர்த்த நாளான காலையில் அலங்காரம் செய்வதற்காக மணமகள் அறைக் கதவை தட்டிய உறவினர்களுக்கு அதிர்ச்சி. நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால், உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தவர்கள் உறைந்து போனார்கள். அறையில் இருந்த ஃபேனில் ரவளி தூக்கிட்டு தொங்கி கொண்டிருந்தனர். ரவளியின் சடலத்தை பார்த்து பெற்றோர்களும், திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களும் கதறி அழுதனர்.

பின்னர், இது குறித்து ரவளியின் அப்பா பிரபாகர், போலீசில் புகார் செய்ய, சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்து விசாரணையைத் துவங்கினார்கள். எந்த சலனமும், தடயமும் இல்லை. சந்தோஷமாகவே ரவளி முன் தினம் இரவு அறைக்கு திரும்பியிருக்கிறார். இந்நிலையில், ரவளியின் செல்போனை ஆய்வு செய்த போது, கடைசியாக மாப்பிள்ளை சந்தோஷிடம் ரவளி பேசியிருந்தது தெரிய வந்தது. நீண்ட நேரம் சந்தோஷிடம் ரவளி பேசியிருக்கிறார். அதுவே கடைசியான உரையாடலாகவும் இருந்திருக்கிறது.

அதன் பின்னர் தீவிர விசாரணை  நடத்திய  போது, ரவளிக்கு மாப்பிள்ளை சந்தோஷ் தந்த டார்ச்சர் தெரிய வந்துத. நன்றாக படித்திருந்த ரவளி, வேலைக்குச் சென்று கை நிறைய சம்பாதித்துள்ளார். இதனால் கல்யாணத்திற்கு பிறகும் வேலைக்கு செல்ல வேண்டும் என்றும், ரவளியின் பெற்றோர் பெயரில் உள்ள சொத்துக்களைப் பிரித்து வாங்கி வரவேண்டும் என்று ரவளிக்கு, மாப்பிள்ளை சந்தோஷ் திருமணத்திற்கு முன் தினம் இரவு திடீர் கண்டிஷன் போட்டுள்ளார்.

ரவளி

விடிஞ்சா கல்யாணம்.. இந்த அர்த்த ராத்திரி நேர கண்டிஷனை ரவளியை கலவரப்படுத்தியுள்ளது. ஊர் கூட்டி, திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், வரப் போகிற கணவன் இப்போதே இப்படி பண பைத்தியமாக இருக்கிறானே என்கிற மன அழுத்தத்தில், மனமுடைந்த ரவளி, தற்கொலை செய்துள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து ரவளியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சந்தோஷைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் திருமணம் நடைப்பெறவுள்ள நிலையில்,  10 மணிக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில், மணப்பெண்ணை சடலமாக பார்த்த உறவினர்களும், தோழிகளும் கதறி அழுதனர். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web