வைரல் வீடியோ!! வாழையிலையில் பொங்கல், இட்லி , சட்னி, வாழைப்பழம்!! லண்டன் பிரதமர் அலுவலகத்தில் பொங்கல்?!

 
லண்டன்

ஜனவரி 15ம் தேதி தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர் என்பது அனைவரும் அறிந்த தகவலே. ஆனால் இங்கிலாந்தில் பிரதமர் அலுவலகத்தில் அலுவலக ஊழியர்கள் பொங்கல் திருநாளைக் கொண்டாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும்  வைரலாகி வருகிறது.

லண்டன்
இந்த வீடியோவில், பாதுகாப்புச் சீருடை அணிந்த ஆண்கள் மற்றும் பிற அதிகாரிகள் வரிசையாக அமர்ந்து பொங்கல், அரிசி, வெல்லம் மற்றும் பாலில் செய்யப்பட்ட இனிப்புப் பொங்கலை ருசித்து சாப்பிடுகின்றனர்.  அங்கு  வாழை இலையில்  பொங்கல்,  இட்லி, சட்னி மற்றும் வாழைப்பழங்களும் பரிமாறப்பட்டுள்ளன.   வேஷ்டி, சட்டை அணிந்த ஒருவர் இன்னும் ஏதாவது வேண்டுமா என கேட்பது கூடுதல் சிறப்பு. 


அதிகாரிகளில் ஒருவர் ‘மிகவும் நன்றாக இருக்கிறது’ என்று சொல்கிறார்.  சிலர் ஸ்பூன்களால் சாப்பிட்டு கொண்டிருந்தாலும் மேலும் சிலர் கைகளால் சாப்பிடுவதை காணலாம். 
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்  பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட வீடியோவில் ” தைப் பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.  உலகம் முழுவதும்  தமிழர்களுக்கு இந்த பண்டிகை எத்தனை  என்பதை நான் அறிவேன். அன்புக்குரியவர்களுடன்  ஒன்று சேரும் நேரத்தில் ,  ​​உங்கள் குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் நலனுக்காக நீங்கள் செய்யும் கடின உழைப்பு மற்றும் தியாகங்களுக்கு வணக்கங்கள். பிரிட்டானிய  தமிழர்களுக்கு மகத்தான நன்றிகள் , எனத் தெரிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web