வைரல் வீடியோ!! ரஞ்சிதமே .. ஆடும் க்யூட் பள்ளிக்குழந்தை!!

 
வாரிசு

விஜய் நடிப்பில் உருவாகி தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில்  பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளிவரத் தயார் நிலையில்  உள்ளது. தமிழகத்தில் அதிகப்படியான தியேட்டர்களில் வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது. தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில்  தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்களிடையெ பெரும் எதிர்பார்ப்பை உருவாகி உள்ளது.  

வாரிசு

இதனால் வாரிசு படத்தை ஆந்திரா, தெலுங்கானாவிலும் கூடுதல் தியேட்டர்களில் திரையிட திட்டமிடப்பட்டு வருகிறது.  விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ம் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  தமன் இசையில், விஜய் குரலில் இந்த பாடல் வெளியானதால் ரசிகர்கள் பலருக்கும் இந்த பாடல் பிடித்துப் போனது.இந்தப்பாடலில்  விஜயின் நடனமும் ரசிகர்களையும் நடனமாட வைத்தது. இந்த பாடலுக்கு விஜய் போலவே நடனமாடி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடியோவை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது ரஞ்சிதமே பாடலுக்கு பள்ளி உடையில் அழகான சுட்டிக்குழந்தை ஒன்று நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web