வைரல் வீடியோ!! கேண்டில் லைட் டின்னரில் லிப்லாக் முத்தம்!! 60 வயதில் 4 வது திருமணத்தை உறுதி செய்த நடிகர் !!

 
பவித்ரா

சாமானியன் வாழ்க்கையில் ஒரு திருமணத்துக்கே  நாக்கைத்  தள்ளுது.. இன்னொன்னா அதெல்லாம் சினிமால பார்க்கறதோட சரி என்ற புலம்பும் குடும்பஸ்தர்கள் தான் அதிகம். ஆனால்  பிரபலங்களின் வாழ்க்கையில் 2 வது , 3 வது திருமணம் எல்லாம் சாதாரணமப்பா என்ற நிலைமை தான் சினிமாவில் இருந்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் முண்ணனி நடிகர் நரேஷ்.  இவர் தெலுங்கில் மட்டுமல்ல  தமிழிலும் பல படங்களை நடித்துள்ளார்.

அதில் குறிப்பாக  நெஞ்சத்தை அள்ளித்தா, பொருத்தம், மாலினி 22 ,பாளையங்கோட்டை திரைப்படங்களில் நடித்தவர்.  நடிகர் நரேஷ்  ஏற்கனவே 3  முறை திருமணம் செய்து விவாகரத்தும் செய்து கொண்டவர்.  இந்நிலையில் மறுபடியும் ஒரு நடிகையை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகிறது. 

நடிகர் நரேஷ்  கடந்த சில மாதங்களாகவே  நடிகை பவித்ரா லோகேசுடன் லிவிங் டு கெதரில் இருந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஜூலையில் ஹோட்டல் அறை ஒன்றில் தங்கி இருந்த போது நடிகர் நரேஷின் மனைவி ரம்யா ரகுபதி, அதிரடியாக புகுந்து இருவரையும் கையும் களவுமாக பிடித்து மீடியாக்கள் முன் செருப்பால் அடித்து அசிங்கப்படுத்தியது குறிப்பிடத்தகக்து. 
இச்சம்பவத்திற்கு பிறகு நடிகர் நரேஷ் ரம்யாவுக்கு முறைப்படி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.  அதன் பிறகு  நரேஷ் மற்றும் பவித்ரா இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். கடந்த ஆண்டு கிருஷ்ணாவின் பிறந்த நாள் விழாவிலும், பவித்ரா குடும்பத்தில் ஒருவராக கலந்து கொண்டார்.

பவித்ரா
இந்நிலையில், நடிகர் நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நேற்று புத்தாண்டு தினத்தை ஒட்டி வெளியிட்டுள்ள வீடியோவில், புதிய ஆண்டு...புதிய தொடக்கம்...உங்களின் வாழ்த்துக்கள் தேவை என்ற கேப்ஷனுடன், கேன்டில் லைட்டில் ஒருவருக்கு ஒருவர் லிப்லாக் முத்தம் கொடுத்து தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

பவித்ரா
இதில் பவித்ரா  கன்னடம், தெலுங்கு, தமிழ்  படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான சர்க்காரு வாரி பாடா படத்தில் மகேஷ் பாபுவின் அம்மாவாக நடித்துள்ளார். திரைத்துறையை பொறுத்தவரை எந்த கதாபாத்திரத்திலும் தனது திறமையை வெளிப்படுத்துபவர் நடிகை பவித்ரா.  திரைத்துறையில் மட்டுமின்றி சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்துவருகிறார். சாப்ட்வேரில் பணிபுரிந்து வந்த  முதல் கணவரையும்,  இரண்டாவது கணவரான சுசேந்திர பிரசாத்தையும் விவாகரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web