வைரல் வீடியோ!! ” நான் உனக்கு வேலைக்காரி இல்ல!!” நடுவானில் விமானபணிப்பெண்ணுக்கும், பயணிக்கும் மோதல்!!

 
விமானப் பணிப்பெண்

விமானப் பயணங்கள் சமீபகாலமாக கேலிக் கூத்தாகி வருகின்றன. வாழ்வில் எப்போதே என்றோ  ஒரு முறை விமானப்பயணம் என்ற காலம் மலையேறி விட்டது. தினசரி காலையில் அலுவலகம் சென்று மாலையில் வீடு திரும்புவது போல் விமானப் பயணங்கள் சர்வசாதாரணமாகிவிட்டன. விமான பயணங்களில் செல்பவர்களில் சில நேரங்களில் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.

விமானப் பணியாளர்களுக்கும், அவர்களுக்கும் சில நேரங்களில் ஒத்துபோவதில்லை. அந்த வகையில் சமீபத்தில் துருக்கி இஸ்தான்புல்லில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் வந்து கொண்டு இருந்தது. விமானத்தில் உணவைத் தேர்ந்தெடுப்பது குறித்து விமானப்பயணிக்கும் விமானப் பணிப்பெண்ணுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. டிசம்பர் 16 ம் தேதி விமானத்தில் நடந்த இந்த மோதலை சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.  

இண்டிகோ

விமானப் பயணி விமானப் பணிப்பெண்ணிடம் "நீங்கள் பயணியின் வேலைக்காரன்" எனக் கூறும் போது அவருக்கு ஆத்திரம் வந்து விடுகிறது.  "நான் ஒரு பணியாளர், உங்கள் வேலைக்காரன் அல்ல... எனக்கூறிவிட்டார்.  ஒரு கட்டத்தில், பயணி ஒருவர் "ஏன் கத்துகிறீர்கள்? வாயை மூடு" என்று விமானப் பணிப்பெண்ணிடம் கூறிய போது பதிலுக்கு பயணியை "வாயை மூடு" என்று விமானப் பணிப்பெண் கூறுகிறார்.சமூக வலைதளங்களில் வைரலாகும் இச்சம்பவம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியிடம் கேட்கப்பட்ட போது இந்த சம்பவம் குறித்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web