வைரல் வீடியோ!! வாரிசு படத்தின் ‘அம்மா’ எமோஷனல் பாடல் வெளியீடு!!

 
வாரிசு

தமிழ் திரையுலகில் இளைய தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர்  தற்போது வம்சி இயக்கத்தில் “வாரிசு” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ராஜு தயாரிப்பில்,  தமன் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் 2 பாடல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  கோடிக்கணக்கான விஜய் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்து கிடக்கின்றனர்.

வாரிசு

வாரிசு படத்திற்கான 3 வது பாடலான SoulOfVarisu என்ற அம்மா செண்டிமெண்ட் பாடல் இன்று வெளியாகி உள்ளது. இந்த பாடல் பாடலாசிரியர் விவேக்கால் எழுதப்பட்டு  சின்ன குயில் சித்ராவால் பாடப்பட்டுள்ளது.  செண்டிமெண்ட் எமோஷனலான  பாடலாக  இருக்கிறது. எல்லாருடைய வாழ்க்கையிலும் இந்த பாடல் ஒத்துப்போகும் அளவிற்கு ஒரு சூப்பரான பாடல் என வாரிசு படக்குழு அறிவித்துள்ளது. 



ஏற்கனவே வாரிசு படத்திலிருந்து ரஞ்சிதமே, தீ தளபதி பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது அடுத்த பாடலும் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் வாரிசு திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பது  குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web