வைரலாகும் வீடியோ!! தளபதி 67 லேட்டஸ்ட் அப்டேட் !! மனம் திறக்கிறார் லோகேஷ் கனகராஜ்!!

 
தளபதி 67


இளைய தளபதியின் வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.  8 ஆண்டுகளுக்கு பிறகு அஜீத் விஜய் படம் வெளியானதால் தல , தளபதி ரசிகர்கள்  கொண்டாடித் தீர்த்தனர். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.அதன்படி நடிகர் விஜய்யின் அடுத்த படமாக தளபதி 67 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின்  தயாரிப்பில்  இசையமைப்பாளர் அனிருத் இசையில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
படத்தில் நடிகர் விஜய்யுடன் கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், த்ரிஷா ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. ரசிகர்கள் அனைவரும் எப்போது தளபதி 67 படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அதற்கான சூப்பரான ஒரு அப்டேட்டை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். 


மைக்கேல் படத்தின்  ப்ரோமோஷன் நிகழ்ச்சியில்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது  “நடிகர் விஜய்யின் அடுத்த படத்தின் தலைப்பை பற்றி நான் பேசக்கூடாது. ஒரு சின்ன குறிப்பு மட்டும் குடுக்குறேன் அதை மட்டும் நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள். படத்தின் அப்டேட் பிப்ரவரி 1,2,3 ஆகிய தேதிகளில் வரும்” என தெரிவித்துள்ளார். இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மைக்கேல்.  

மைக்கேல்

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள  இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் பிப்ரவரி 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே  உள்ள  நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் நடத்தப்பட்டது. அதில்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  தளபதி 67  குறித்து அறிவித்துள்ளார்.  இதனை கேட்ட விஜய் ரசிகர்கள் இப்போதிருந்தே மிகுந்த எதிர்ப்பார்ப்பில் பிப்ரவரி முதல் வாரத்திற்காக காத்து கிடக்கின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web