தொண்டர்கள் அதிர்ச்சி!! நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!!

 
துரைமுருகன்

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துரைமுருகன்
தமிழக அமைச்சரவையில்  நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன். இவருக்கு வயது 80. திமுக அமைச்சரவையிலேயே மூத்தவர் இவர் தான்.  திமுகவின் பொதுச்செயலாளரும் இவர் தான். எந்த மாதிரியான கேள்விகள் இவரை நோக்கி கேட்கப்பட்டாலும் நகைச்சுவை கலந்த பேச்சால் பதில் அளிக்க கூடியவர். இதனால் எதிர்க்கட்சியினரும் இவரது பேச்சை கைதட்டி ரசித்து கேட்பர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துரைமுருகனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால்  அவ்வப்போது மருத்துவமனைக்கு  உடல் பரிசோதனைக்காக சென்று வருவதுண்டு. 

துரைமுருகன்
இந்நிலையில் இன்று காலை முதலே  துரைமுருகனுக்கு  திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ தகவல் எதையும் இதுவரை வெளியிடவில்லை.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web