காலையில் வாக்கிங்.. ஜாக்கிங்.. உஷார்.. ! அடுத்த 3 நாட்களுக்கு கடும் பனி மூட்டமா இருக்குமாம்! லேசான மழைக்கும் வாய்ப்பு!

 
வாக்கிங் ஜாக்கிங் பெண்கள் ஓட்டம் மெரீனா கடற்கரை நடைபயிற்சி

தினந்தோறும் காலைல நடைபயிற்சி.. அதாங்க.. வாக்கிங், ஜாக்கிங் போறவங்க கவனத்துல வெச்சுக்கோங்க.. அடுத்த 3 நாட்களுக்கு காலை நேரங்களில் பனிமூட்டம் அதிகளவில் இருக்கும்னு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை வேக மாறுபாட்டின் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு கடும் பனி மூட்டத்துடன் லேசான மழை பெய்யலாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த வாரத் தொடக்கம் முதலே வடதமிழகத்தில் பனிமூட்டம் காணப்படுகிறது. பனி மூட்டத்தின் காரணமாக நேற்று அதிகாலையில், விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிகளவிலான பனி மூட்டம் காரணமாக இன்று 14 விமானங்கள் வரை குறிப்பிட்ட நேரத்துக்கு கிளம்பாமக், தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்நிலையில் இந்த பனிமூட்டம் மேலும் 3 நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழை
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 29 ல் வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.  இதனால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிபேட்டை, மயிலாடுதுறை  மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன.  டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் வங்கக்கடலில் உருவான மாண்டாஸ் புயலால் தமிழகம் முழுவதும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

மழை

இன்று தென்‌ தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும் அதிகாலை வேளையில்‌ லேசான பனி மூட்டமும் காணப்படும்‌.இதனை தொடர்ந்து நாளை தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம். பெரும்பாலான இடங்களில் ஜனவரி 4ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவ கூடும்‌ என்று கூறப்பட்டுள்ளது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web