எச்சரிக்கை!! அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை!! பனிமூட்டம் தொடரும்!!

 
மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்து அதிகாலை வேளையில் கடும் குளிரும் பனிமூட்டமும் நிலவி வருகிறது. நீலகிரியில் உறைபனியால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்தில் நிலவி வரும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக  தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிமூட்டம்
அதன்படி தமிழகத்தின் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படலாம். நீலகிரி, கோவை மாவட்டங்களை பொறுத்தவரை  இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனி நிலவக்கூடும்.  நாளை ஜனவரி 21ம் தேதி சனிக்கிழமை தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.  உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படலாம்.  நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் 

மழை
நாளை மறுநாள் ஜனவரி 22  முதல் ஜனவரி 24ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை  தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 
சென்னையை பொறுத்தவரை சென்னை  மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். புறநகர் பகுதிகள் மற்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக  30 டிகிரியும், குறைந்தபட்ச வெப்பநிலையாக  21-22 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web