உஷார்.. மீண்டும் வேகமெடுக்குது கொரோனா! இனி அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் கட்டாயம்!

 
தடுப்பூசி

சின்ன அண்ணன் சீனா விழி பிதுங்கி, செய்வதறியாமல் கதறிக் கொண்டிருக்கிறான். உலக நாடுகள் ஒரு பக்கம் சீனாவை பரிதாபமாக பார்த்தாலும், கொரோனா பரவல் குறித்து கலக்கத்துடனே நாட்களைக் கடந்து செல்கிறார்கள். ஆயிரக்கணக்கில் எல்லாம் இல்லை... லட்சக் கணக்கில்.. சுமாராக 20 லட்சத்துக்கும் அதிகமானோர் சீனாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பார்கள் என்று எச்சரித்துள்ளது ஆய்வறிக்கைகள்.

சீனா மட்டுமல்லாமல், ஜப்பான், அமெரிக்கா,  கொரியா என பல நாடுகளில் மீண்டும் கொரானா அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என  அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர்   கடிதம் எழுதி உள்ளார்.

தடுப்பூசி

இது குறித்து அவசர கூட்டம் மத்திய சுகாதார துறை அமைச்சர் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகள், நிபுணர்கள் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் சீனா, அமெரிக்கா  போன்ற நாடுகளில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் தொற்று பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் அனைவரும் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு விடுக்கப்பட்ட செய்திக் குறிப்பில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும். விமானப் போக்குவரத்துக்கு தற்போதைய கட்டுப்பாடுகளே  தொடரும். எந்த மாற்றமும் கிடையாது. இது வரை இந்தியா முழுவதும்  27%  மக்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளனர். மூத்த குடிமக்கள் உட்பட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web