உஷார்.. அடுத்த 40 நாட்களில் இந்தியாவில் வேகமெடுக்கும் பி.எஃப் 7 வைரஸ்! மத்திய அரசு எச்சரிக்கை!

 
கொரோனா

மக்களே.. கிறிஸ்துமஸ் துவங்கி இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகை தினங்களாக வரவிருக்கின்றன. அதனால் உஷாராகவும், எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடன் இருங்க. புத்தாண்டு, மார்கழி மாத பஜனை, தைப் பொங்கல் திருவிழா, ஜல்லிக்கட்டு, காணும் பொங்கல், பொருட்காட்சி, புத்தகத் திருவிழா என பொதுமக்கள் ஷாப்பிங், டேட்டிங், சாட்டிங், பர்சேஸ், சொந்த ஊருக்கு ப் விடுமுறைக்கு படையெடுப்பது என திரும்புகிற திசை எல்லாம்  ஜனத் திரளாகவே இருக்கும்.

தற்போது உலகம் முழுவதுமே கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் அடுத்த 40 நாட்களுக்குள் உருமாறிய கொரோனா வைரஸான பி.எஃப் 7 வைரஸ் பரவல் வேகமெடுக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கொரோனா

சீனா, அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்த புது உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்த புது வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவர் மூலமாக 16 பேருக்கு பரவக் கூடும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. புது வருஷத்தில், ஜனவரி மாத மத்தியில் இந்த புது வைரஸ் அதிகளவில் பரவ கூடும் என்று எச்சரித்துள்ளது. இந்த புதிய வகை வைரஸ் தொற்றால் உயிரிழப்பு மிக குறைவாக காணப்படும் என்றாலும், வரும் முன் காப்பது தான் புத்திசாலித்தனம். 

கொரோனா

அதனால், கூட்டத்தில் செல்லும் போது, மறக்காம முக கவசம் அணிந்து செல்லுங்கள். இந்தியாவில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் 2வது டோஸ் தடுப்பூசியும், 27 சதவிகிதத்தினர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால், இந்த புதிய வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றாலும், ஜாக்கிரதையாகவே இருங்க. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web