உஷார்... யூ-ட்யூப் வீடியோவால் கொள்ளை! இப்படியும் நடக்கலாம் ஜாக்கிரதை!

 
யூ-ட்யூப் கொள்ளை

நீங்கள் சொந்தமாக யூ-ட்யூப் சேனல் நடத்துகிறீர்களா? மறக்காம சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க... லைக் பண்ணுங்க... ஷேர் பண்ணுங்க.. என்று ஒவ்வொரு வீடியோக்களின் ஆரம்பத்திலும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களா? இதோ கோவையில் இப்படி தனியாக யூ-ட்யூப் சேனல் நடத்திக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த பரிதாபக் கதையைக் கேளுங்க. தன்னுடைய சேனலுக்கு தொடர்ந்து சப்-ஸ்ரைபர்கள் அதிகரித்தது சந்தோஷம் தர, அப்படி சேனலை சப்ஸ்-க்ரைப் பண்ண ஒருத்தர், இவர் வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்து போலீசில் சிக்கியிருக்கிறார். 

கோவை, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுஹைல் (29). இவரது மனைவி பாபினா (28). இவர்கள் இருவரும் சேர்ந்து சுஹைல் விலாகர் மற்றும் சைபர் தமிழா ஆகிய யூடியூப் சேனல் நடத்தி வருகின்றனர். இந்த தம்பதிக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது.

யூடியூப் மூலம் சம்பாதித்த பணத்தை கொண்டு கோயம்புத்தூர் கே.ஜி.சாவடி பிச்சனூர் பகுதியில் தனக்கு சொந்தமாக கனவு இல்லம் என்ற வீட்டை இவர்கள் கட்டி வந்தனர். இந்த வீட்டின் கட்டுமான பணி ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு நிகழ்வுகளையும் தங்களது யூடியூப் சேனலின் சப்ஸ்க்ரைபர்களுடன் வீடியோக்களை பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வந்தனர்.

Robbery

இவர்களது கனவு இல்லத்தின் பணி முடிந்து கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கிரகப் பிரவேசம் செய்து புது வீட்டில் குடியேறினர். அந்த வீட்டில் தான் தற்போது வசித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று கொள்ளையர்கள் அதற்கு முந்தைய இரவே இவர்களின் வீட்டிற்கு வந்து மொட்டை மாடியில் பதுங்கி இருந்துள்ளனர். 

பின்னர் ஒரே ஒரு கொள்ளையன் மட்டும் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டி சுஹைலிடம் கத்தியை காட்டி மிரட்டி  கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.  உடனே சுதாரித்துக் கொண்ட சுஹைல், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஜி. சாவடி போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

KG Chavadi

போலீசார் விசாரணையில் கொள்ளையடிக்க வந்த நபர் புதுச்சேரியைச் சேர்ந்த அனுராம் (25), என்பதும், யூடியூப் மூலம் சுஹைல் அதிக பணம் சம்பாதித்து உள்ளதாகவும், அதை கொள்ளையடிக்கும் நோக்கில் புதுச்சேரியில் இருந்து அனுராம் கோவைக்கு வந்ததும் தெரிய வந்தது. இவரும் சுஹைலின் சேனல் சப்ஸ்கிரைப் என்பது தான் அதிர்ச்சியான உண்மை. அவரது  வீடியோக்களை பார்த்து தானும் குறுகிய வழியில் சீக்கிரமாக சம்பாதித்து பணக்காரனாக வேண்டும் என்ற திட்டத்துடன் இந்த தவறான செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web