களைகட்டிய தை அமாவாசை வழிபாடு!! அம்மா மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கானோர் தர்ப்பணம்!!

 
அம்மா மண்டபம்


தை அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தைஅமாவாசை தினத்தன்று தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர். தை அமாவாசையன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனிதநீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வர்.

அம்மா மண்டபம்

இதனால் முன்னோர்களின் ஆசிர்வாதம் என்றும் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.அதன்படி தைஅமாவாசை தினமான இன்று திருச்சி அம்மாமண்டபம் படித்துறையில், கங்கையின் புனிதமாக கருதப்படும் புனிதகாவிரிஆற்றில் நீராடி பின்னர் தங்களது மூதாதையர்களுக்கு திதி கொடுத்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தனர்.

அம்மா மண்டபம்

இதில் திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துவழிபாடு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து காவிரி தாயாரையும் பின்னர் ஸ்ரீரங்கம், திருவாணைக்காவல், சமயபுரம் உள்ளிட்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தனர். இதேபோன்று அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள படித்துறைகளில் பொதுமக்கள் புனிதநீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web