களைகட்டும் தேர்தல் திருவிழா!! நான் தான் போட்டியிடுவேன்!! ஓபிஎஸ் பரபரப்பு!!

 
ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்புக்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டு தேர்தல் களத்தில்  மல்லுக்கட்ட தயாராகி வருகின்றன. ஆங்காங்கே பிரிந்து கிடக்கும் தேசிய மற்றும் மாநில கட்சிகள் தீவிரமாக திட்டமிடத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே உட்கட்சி பூசலால் தினம் ஒரு சர்ச்சையை உருவாக்கி வரும் அதிமுகவும் அதன் பங்கிற்கு சளைக்காமல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. 

எடப்பாடி பழனிசாமி அணி தேர்தலில் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இந் நிலையில் பன்னீர்செல்வம் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த பரபரப்புக்கு மத்தியில், ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிருகிறோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உள்ளதால் போட்டியிடுகிறோம். எங்களிடமும் கூட்டணிக் கட்சிகள் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

ops

அதேநேரத்தில், இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் நாங்கள் விட்டு தருவோம். சட்டவிரோதமாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் தொடருகிறேன். இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன், என்றும் ஓ,பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

ஏற்கனவே பாஜக இதுவரை தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. அதிமுக ஆதரவா என்ற கேள்விக்கு பாஜக தலைவர், கூடி ஆலோசித்து முடிவெடுப்போம் என கூறிவிட்டனர். இந்த சூழலில் பாஜகவுக்கு ஆதரவு என பன்னீர்செல்வமும் கூறியிருப்பதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web