களைகட்டும் திருமண ஏற்பாடுகள்!! ஜோராக தயாராகும் கே.எல்.ராகுல் , அதியா ஷெட்டி ஜோடி!!

 
கே.எல்.ராகுல் அதிஷா

கடந்த 5 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வீரர் கே எல் ராகுலும்,  பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும்  காதலித்து வருகின்றனர்.இருவரும் பல இடங்களுக்கு சென்றபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தவும் தவறவில்லை. அதியா ஷெட்டி தமிழில்  12பி, தர்பார் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இருவரும் துபாய் சென்று அங்கு ஒன்றாக புத்தாண்டை கொண்டாடியதை சமூக வலைதளங்களி பதிவிட்டிருந்தனர். 

கே.எல்.ராகுல்
இந்நிலையில், ஜனவரி 23ம் தேதி இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை இருந்த போதிலும் அதியா ஷெட்டியின் விக்கிப்பீடியா பக்கத்தில் முதலில் குறிப்பிடப்பட்டு பின்னர் அது நீகக்ப்பட்டது.மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 21ம் தேதி சங்கீத் நிகழ்ச்சியும், மெஹந்தி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.  திருமணத்தை முன்னிட்டு கே எல் ராகுல் குடியிருக்கும் வீடு முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கே.எல்.ராகுலின் காதலுக்கு இருவீட்டிலும் பச்சைக்கொடி காட்டியபிறகு இந்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த திருமண நிகழ்ச்சியில் விராட் கோலி, எம் எஸ் தோனி, அக்‌ஷய் குமார், ரோகித் சர்மா, சல்மான் கான், ஜாக்கி ஷெராஃப் என நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கே.எல்.ராகுல்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில்  கே எல் ராகுல் இடம் பெறாதது குறித்து பிசிசிஐ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குடும்பத்தில் உள்ள கடமைகள் காரணமாக அவர் இந்த தொடரில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது  குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் நியூசிலாந்து தொடருக்கு அடுத்ததாக பிப்ரவரி 9ம் தேதி நடைபெற உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் கே எல் ராகுல் இடம் பெற்றுள்ளார். அதே போல் அக்‌ஷர் படேல் மற்றும் மேகா இருவரும் நீண்ட காலமாக காதலித்து வரும்  நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். இவர்களது திருமண தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு முன்னதாக அக்‌ஷர் படேல் - மேகா திருமணமும் நடக்கும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web