மறுபடியும் மொதல்..ல இருந்தா?! நாளை மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! 5 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை!!

 
காற்றழுத்த தாழ்வு பகுதி

நாளை வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  தமிழகத்தில்  தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் உருவாகும்  இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கில் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரக்கூடும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் டிசம்பர்  18ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மழை
சென்னையை பொறுத்தவரை  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று  டிசம்பர் 14ம் தேதி புதன்கிழமை  முதல் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  டிசம்பர் 15ம் தேதி தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது புயல் சின்னமாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும் இந்த புயல் உருவானால் இதற்கு மொக்கா  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆரஞ்சு அலர்ட்

தற்போது மாண்டஸ் புயலால் உருவான  பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் தமிழகத்தில் டிசம்பர்15ம் தேதி வரை மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்  அடுத்த 3மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், சேலம், தருமபுரி, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை  மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web