பொங்கலுக்கு என்னென்ன கிடைக்கும்?! நாளை முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!

 
அசத்தல்!! மக்களே பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற தயாராகிட்டீங்களா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வர இன்னும் சில நாட்களே மீதம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வேஷ்டி சேலைகள் கரும்பு வழங்கப்படும். கடந்த சில வருடங்களாக ரொக்கப் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் புதிய டிசைன்களில் வேஷ்டி சேலைகள் வழங்கப்பட உள்ளன . இதற்கான ஆர்டர்கள் முன்பே செய்யப்பட்டுவிட்டன. 

பொங்கல்


கடந்த ஆண்டு தமிழக  அரசு 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது. அதிலும் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்ற பொருட்கள் பலவும் தரமற்றதாக இருந்ததாக எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் சார்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள்  எழுந்தன.  இது குறித்து உடனடியாக  ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,  அதனுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் எனவும்  அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

பொங்கல் பரிசு தொகுப்பு


நடப்பாண்டில்  பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரொக்கப் பரிசாக ரூ 1,000 ரொக்கம் வழங்குவது  குறித்து நாளை டிசம்பர்  19ம் தேதி தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்க இருக்கிறார். இதில் தமிழக  சட்டப்பேரவை கூட இருக்கும் தேதி, ஆளுநர் உரையில் இடம்பெறும் கருத்துகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web