பெண்கள் கல்லூரிகளுக்கு செல்லும் போது திருமணத்திற்கு செல்வது போல் உடை அணிகிறார்கள்!! அமைச்சர் சர்ச்சை பேச்சு!!

 
ஆப்கன் பெண்கள்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள்  ஆட்சியை கைப்பற்றிய பிறகு   பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் , புகார்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் தங்களின் சுதந்திரம் மெல்ல மெல்ல பறி போவதாக அங்கிருக்கும் பெண்கள் தெரிவிக்கின்றனர்.  இந்த வரிசையில் தற்போது புதிதாக பல்கலைக்கழகங்களில் பெண்கள் சேர்ந்து படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கன் பெண்கள்

தலீபான்களின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் வகையில் ஆப்கானிஸ்தானின் உயர்கல்வித்துறை அமைச்சர் நேடா முகமது நதீம் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி  “உயர்கல்வி பயிலும் பெண்களுக்கான நடைமுறைகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை.  ஹிஜாப் விதிகளை முறையாக பின்பற்றாத பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போது திருமணத்திற்கு செல்வது போல் உடை அணிகிறார்கள்.

ஆப்கன் அமைச்சர்

அத்துடன் அறிவியல் படிப்புகள் பெண்களுக்கு ஏற்றவையாக இல்லை. பொறியியல் வகையான  சில படிப்புகள் மாணவிகளின் கண்ணியம் மற்றும் ஆப்கானிய கலாச்சாரத்திற்கு ஏற்றவை கிடையாது.  அத்துடன்  ஆண்களின் துணை இன்றி சில பெண்கள் தனியாக பயணம் செய்வதும் அதிகரித்துள்ளது” இதனை கட்டுப்படுத்தவே படிப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என விளக்கம்  தெரிவித்துள்ளார். இந்த விளக்கம்  பெரும் அதிர்ச்சியை அளித்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web