சனிப் பெயர்ச்சி எப்போது? தொடரும் சர்ச்சை: திருநள்ளாறு கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

 
சனி சனிப்பெயர்ச்சி திருநள்ளாறு

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வரபகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் நிகழ்ச்சி இக்கோயிலில் சனிப் பெயர்ச்சி விழாவாக நடப்பது வழக்கமான ஒன்று. அன்றைய தினம்  பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி சனிபகவான் அருளைப் பெற பிரார்த்தனை செய்வது வழக்கம்.

சனி சனிப்பெயர்ச்சி திருநள்ளாறு

இந்த முறை மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு ஜனவரி மாதம் 17ம் தேதி சனி பகவான் பெயர்ச்சியாக உள்ளார். இந்தாண்டு விழா திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் ஜனவரி மாதம் 17ம் சனிப்பெயர்ச்சி என்ற குழப்பம் பக்தர்களிடம் நிலவியது. இந்நிலையில் கோயில் நிர்வாக அதிகாரி அருணகிரி நாதன், தரு ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் இது தொடர்பாக நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.... திருநள்ளாறில் அனைத்து பூஜைகளும் வாக்கிய பஞ்சாங்கத்தை பின் பற்றியே நடந்து வருகிறது. இதன் படியே  வைகாசி விசாக பிரமோற்சவம் வாக்கிய பஞ்சாங்கத்தை அனுசரித்து நடக்கிறது.

சனிப்பெயர்ச்சி விழாவும் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், சனியின் கிரகச் சாரம், உதயாதி நாழிகை ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு தேதி மற்றும் நேரம் கணிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

சனி சனிப்பெயர்ச்சி திருநள்ளாறு

திருக்கணித பஞ்சாங்க கணித முறை மற்றும் பிற பஞ்சாங்க கணிப்பின் வழியாக ஜனவரி மாதத்தில் சனிப்பெயர்ச்சி தேதிகள் அறிவிக்கப்பட்டாலும், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் தைப் பூசத்திற்கு வெளியிடப்படும் ஸ்தோப கிருது வருட வாக்கிய பஞ்சாங்கத்தை கணக்கிட்டு, மார்கழி மாதம் முதல் வாரத்தில் இந்தாண்டு டிசம்பர் மாதம் கொண்டாடப்பட உள்ளது. இது தொடர்பாக பஞ்சாங்கம் வெளி வந்த பிறகு, துல்லியமான கணக்கீட்டுக்கு பிறகு கோயில் சார்பில் மேலும் விபரங்கள் வெளியிடப்படும். இந்த அறிவிப்பானது பக்தர்களுக்கு குழப்பத்தை தீர்க்கும் என்று கூறினர். சிவஸ்ரீ நடராஜ சிவாச்சாரியார், சந்திரசேகரர் சிவாச்சாரியார், ஞானசம்பந்த சிவாச்சாரியார், ராஜாசு வாமிநாத சிவாச்சாரியார் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web