கிறிஸ்துமஸ் நாளில் 5 மெழுகுவர்த்திகள் ஏற்றுவது ஏன்?!

 
கிறிஸ்துமஸ் சில சுவாரசிய தகவல்கள்!

இன்று டிசம்பர் 25  ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக எளிமையாக கொண்டாடப்பட்டது.  நடப்பாண்டில் கொரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில் இன்றைய தினம்  கிறிஸ்துமஸ் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இயேசுவின் பிறந்தநாளாக அனுசரிக்கப்படும் கிறிஸ்துமஸ் குறித்து வால்பாறை தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தின் பங்குதந்தை மரிய ஜோசப் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மக்களின் மனதில் இருந்த இருளை அகற்ற உதித்த பேரொளி தான் கிறிஸ்துமஸ் பண்டிகையின் நோக்கம்

கிறிஸ்துமஸ் நாளில் 5 மெழுகுவர்த்திகள் ஏற்றப்படுவது ஏன்?


பெத்லகேம் என்னும் சின்னஞ்சிறு ஊரில் மாட்டுத்தொழுவத்தில் எளிமையாக பிறந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் வாழ்ந்த காலத்தில் ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்க பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி காட்டினார். அவரின் பிறப்பைக் கொண்டாடுவதால் மக்களின் மனதில் உறுதியான நம்பிக்கை ஏற்படும்.
கிறிஸ்துமஸ் விழா நமக்குச் சொல்லும் செய்தி, அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், பகிர்வு ஆகியவையே.

கிறிஸ்துமஸ் நாளில் 5 மெழுகுவர்த்திகள் ஏற்றப்படுவது ஏன்?

கிறிஸ்துவின் பிறப்பு அன்பின் விழா என்பதை உணர்த்த முதல் வாரத்தில் கருநீல நிற மெழுகுவர்த்தியும், நம்பிக்கையின் விழா என்பதை உணர்த்த 2ம் வாரத்தில் மீண்டும் ஒரு கருநீல மெழுகுவர்த்தியும், மகிழ்ச்சியை கொண்டாட 3ம் வாரத்தில் இளஞ்சிகப்பு நிற மெழுகுவர்த்தியும், எதிர்நோக்கினை வெளிக்காட்ட 4 வது வாரத்தில் மீண்டும் கருநீல நிற மெழுகுவர்த்தி என கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்பு 4 வாரங்களில் இந்த நான்கு வகையான மெழுகுவார்த்திகள் தேவாலயங்களில் ஏற்றப்படுவது வழக்கம்.கிறிஸ்துவின் பிறந்த நாளில் 5 வதாக வெள்ளை நிற மெழுகுவர்த்தியும் ஏற்றப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web