ஈரோடு கிழக்கு கைக்கு கை கொடுக்குமா?! வாசனை மலரோடு வாசன் களமிறங்குவதாக பேச்சு !

 
வாசன்


ஈரோடு கிழக்குத் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த  திருமகன் ஈவெரா மறைந்ததையடுத்து வரும் பிப்ரவரி 27ம் தேதி அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. கூட்டணிக் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிற நிலையில் ஒரு ஊர்வலம் வந்தோம் வரும் 31ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 8ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனையும், பிப்ரவரி 10ம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என்றும், பிப்ரவரி  27ல் வாக்குப்பதிவும் நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு  முடிவுகள் அறிவிக்கப்படும்.

கமல், சீமான்
ஈரோடு கிழக்குத் தொகுதியைப் பொறுத்தவரை ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 713 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 140 பேரும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் 23 வாக்காளர்களும், 22 ராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள் இருக்கிறார்கள். கடநத முறை சட்டமன்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளை பார்த்துவிடலாம்.
திருமகன் ஈவெரா (காங்கிரஸ்) - 67,300
யுவராஜா (தமாகா) - 58,396
கோமதி (நாம் தமிழர் கட்சி) - 11,629
ராஜ்குமார் (மநீம) - 10,005
நோட்டா - 1,546
முத்துகுமரன் (அமமுக)-1204


இந்தத் தேர்தலில் 8904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா (காங்கிரஸ்) வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் அதிமுக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கூட்டணி தர்மம் எனச்சொல்லி மீண்டும் அவர்கள் வசமே சீட்டுகளை ஒப்படைக்க இருக்கின்றன. ஆகவே காங்கிரஸ் தமாகா இடையேதான் மீண்டும் போட்டி என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள், காங்கிரஸ் சார்பாக ஈவிகேஎஸ். இளங்கோவனின் மனைவி வரலெட்சுமி அல்லது மற்றொரு மகன் சஞ்ஜெய் போட்டியிடுவார்கள் என தெரிய வருகிறது. ஆட்சி செய்த்த ஒன்றரை ஆண்டுகளில் மக்களிடம் பெரும் செல்வாக்கு பின்னடைவை சந்தித்து இருப்பதால் திமுக மீண்டும் காங்கிரஸ் வசமே ஒப்படைத்து கழண்டு கொண்டது.

ஈவிகேஎஸ்
கொங்கு அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்பட்டாலும் கோட்டையிலே ஓட்டை இரட்டை இலை ரூபத்தில் வந்திருக்கிறது.  ஆகவே அவர்களும் ஜகா வாங்கப்போகிறார்களாம், எனவே மீண்டும் தமாகா சார்பில் யுவராஜே களமிறக்கப்படுவார் என்கிறார்கள் ஆனால் ஒரு சின்ன மாற்றம் சின்னம் பாஜகவின் தாமரை என்கிறார்கள் விஷயமறிந்த கட்சி வட்டாரத்தினர் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக தமிழகத்தில் இதைப்பயன்படுத்த பாஜக பார்க்கிறது என்கிறார்கள் இன்று கடலூரில் சி.டி.ரவி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் இந்த முடிவினை அறிவிப்பார்கள் என்கிறார்கள்.
கடந்தமுறை களத்தில் இருந்த நா.த.கட்சி, ம.நீ.மையம், அமமுக ஆகியவை களத்தில் இருந்தாலும் இம்முறை நாம் தமிழர் மட்டுமே களமிறங்கும் என்கிறார்கள். அக்கட்சி சார்பாக சவுக்கு சங்கருக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆக ஆக களை கட்டத்தொடங்கிவிட்டது ஈரோடு கிழக்கு, பெரும்பாலும் இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் ஆனால் இம்முறை அப்படி அங்கே நடக்க தலையால் தண்ணீர் குடிக்க வேண்டி இருக்கும் என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web