மேஜிக் நிகழ்த்துமா மாருதி, ஹூண்டாய் நிறுவனங்கள் !!

 
ஹூண்டாய்


நாட்டின் மிகப்பெரிய வாகனக் கண்காட்சியான ஆட்டோ எக்ஸ்போ 2023, டில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்தக் கண்காட்சியில் நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுசூகி மற் றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் தங்களின் பேட்டரி கார் தயாரிப்பை, பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத் தும் வாய்ப்பு உள்ளதாக, கார் சந்தை நிபுணர்கள் ஆர்வத்துடன் மகிழ்ச்சியுடனும் தெரிவித்துள்ளனர்.

ஹூண்டாய்
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் கார் ரகங்கள் மெல்ல மெல்ல குறைக்கப்பட்டு, பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த வகையில், உலகின் மிகப்பெரிய கார் சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் உற்பத்தியை பெட்ரோல் / டீசல் இன்ஜினில் இருந்து, ஹைபிரீட் இன்ஜின்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.

ஹூண்டாய்
இதன் அடுத்தகட்டமாக முக்க முழுக்க பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் / கார்களை, இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்யும் முயற்சியில் உள்ளது.  இதில், முன்னணி கார் தயாரிப்பாளர்களான மாருதி சுசூகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் குறைந்த விலையில் பேட்டரி கார்களை சந்தைப்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.  இதற்கு ஏற்றார்போல், பிரகதி மைதானத்தில் நாளை தொடங்கும் கார் கண்காட்சியில் இந்நிறுவனங்கள் பேட்டரி கார்களை காட்சிக்கு வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  
ஏற்கவே டாடாவின் எலெக்ட்ரிக்காரான நெக்சான் ,டியாகோ, டைகர், சாலைகளில் வலம் வந்து கொண்டிருக்க போட்டியில் ஹுண்டாயில் கோனாவும் உள்ள நிலையில் இந்திய மக்களின் மனம் கவர்ந்த மாருதியும் இணைந்தால் ஹய்யா ஜாலிலே ஜிம்கானாதான் போங்க...

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web