தேர்வு தேதி மாற்றப்படுமா?! சு.வெங்கடேசன் எம்.பி. வங்கியில் உள்ளிருப்பு போராட்டம்!!

 
வெங்கடேசன்

தமிழகத்தில் எஸ்பிஐ வங்கி கிளைகளில் 355 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவைகளை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வுகள் நடத்தப்பட்டன. அடுத்த கட்ட தேர்வுகள்  ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அன்று இந்த தேர்வு நடத்தப்படுவதால் தேதியை மாற்ற வேண்டும் என எம்பி சு. வெங்கடேசன்  , தமிழச்சி தங்கப்பாண்டியன் , சீமான் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர். 

வெங்கடேசன்


இந்தியா முழுவதும் எஸ்பிஐ வங்கிகளில்   5008 காலிப் பணியிடங்கள்  உள்ளன.   தைப்பொங்கல் திருநாளான அன்று முதன்மைத் தேர்வை அறிவித்துள்ளதற்குத் தேர்வர்கள் பலரும் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்தனர். இதுவரை இந்த கோரிக்கை குறித்து  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதனையடுத்து  எஸ்பிஐ வங்கியின் கிளர்க் முதன்மை தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர்  என  100க்கும் மேற்பட்டோர்,  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி வட்டார அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

எஸ்பிஐ

வங்கி அதிகாரிகள் சு.வெங்கடேசனை  பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதன்பின்னர் எம்.பி சு. வெங்கடேசன், சி.பி.எம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்வா, வட சென்னை மாவட்டச் செயலாளர் எல். சுந்தரராஜன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இதன்பிறகு  அறையில் அமர்ந்து கோரிக்கை வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்

From around the web