சறுக்கிய விப்ரோ.. மீண்டும் வீறு கொண்டு எழுமா?

 
விப்ரோ

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்பக் குழும நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, மின்னணு தவிர, மின் சாதனங்கள் தயாரிப்பிலும் தனது முத்திரையை பதித்து வருகிறது. இந்நிலையில், விப்ரோ நுகர்வோர் சந்தைப் பொருட்கள் துறை தொடங்கப்பட்டு, சில்லறை விற்பனை சந்தையிலும் விப்ரோ நிறுவனம் தடம் பதித்துள்ளது.

விப்ரோ

கேரளாவில் 1976 முதல் செயல்பட்டு வரும் 'நிர்பரா' பிராண்ட் மசாலா மற்றும் பேக்கிங் உணவுப் பொருட்களை, விப்ரோ கையகப்படுத்தியுள்ளது. மழை வெள்ளம், கொரோனா உட்பட பல பிரச்னைகளால், இந்த பிராண்ட் தள்ளாடிக் கொண்டிருந்தது. அதே நேரத்தில், தென்னிந்தியா முழுவதும் இந்த பிராண்டுக்கு நல்ல வரவேற்பு இருந்ததை சந்தை ஆய்வுகள் வழியாக உறுதிப்படுத்திய விப்ரோ, நிர்பராவை கையகப்படுத்தி, சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. இந்த ஒப்பந்தம் நேற்று முடிவடைந்தது.

விப்ரோ

விப்ரோ ஏற்கனவே நுகர்வோர் சந்தையில் சந்துார் சோப், யார்ட்லி பவுடர் உட்பட பல பொருட்களை சந்தைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆண்டுக்கு 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் கோடி விற்பனை மதிப்பு கொண்ட சமையல் பொருட்கள் சந்தையிலும் விப்ரோ, தடம் பதிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றைய வர்த்தகத்தில் விப்ரோவின் பங்கு பி.எஸ்.சியில் சிறிதளவே குறைந்து ரூபாய் 388.95க்கு வர்த்தகமானது இதன் அதிகபட்ச 52 வார விலையாக ரூபாய் 726.20 இருந்தது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web