18 வயசுல தேர்தலில் வென்று சாதனை! அமெரிக்காவின் இள வயது மேயர்!

 
ஜெய்லன்

அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிக இள வயது மேயர் ஜெய்லன் ஸ்மித். சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க மேயர் தேர்தலில் 18 வயதே ஆன ஜெய்லன் ஸ்மித் போட்டியிட்ட போது, அத்தனை எளிதில் யாரும் இவரை எதிர்கொள்ளவில்லை. 18 வயசு பையன் இந்த தேர்தலில் என்ன சாதித்து விட போகிறான் என்கிற ஏளனத்தை போகிற இடங்களில் எதிர்கொண்ட ஜெய்லன், அதன் பின்னர், தனக்கெதிரான கருத்துக்களை தனது வெற்றிக்கான வியூகங்களாக வகுத்து கொண்டது தான் வரலாற்று பக்கங்களில் திருத்தி எழுதி இருக்கிறது. 

அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் இருந்து கிழக்கே இயர்லே என்ற நகரத்திற்கான மேயர் தேர்தலில், சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்த மாணவர் ஜெய்லன் ஸ்மித் போட்டியிட்டு இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நகரின் சாலை மற்றும் துப்புரவு சூப்பிரெண்டாக உள்ள நெமி மேத்யூஸ் என்பவரை வீழ்த்தி ஸ்மித் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். 


18 வயதான ஸ்மித் இந்த வெற்றியின் மூலம், அமெரிக்க வரலாற்றில் மிக இளம் வயதில் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த வெற்றிக்கு பின்னர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்மித் வெளியிட்ட செய்தியில், இயர்லே நகரின் சிறந்த அத்தியாயம் கட்டமைக்கும் தருணம் இது. எனது தாயாரால் இந்த வெற்றியை நினைத்து இன்னமும் அழுகையை நிறுத்த முடியவில்லை. தேர்தலில் எனக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு நன்றி என தெரிவித்து உள்ளார்.

smith

இந்த ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்த அவர், பொது பாதுகாப்பு, கைவிடப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்களை மீட்டெடுப்பது அல்லது நீக்குவது மற்றும் அவசர காலத்திற்கு தயாராகும் புதிய திட்டங்களை அமல்படுத்துவது போன்ற விஷயங்களை முன்னிலைப்படுத்தி பிரசாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web