இதிலேயும் பெண்கள் தான் லீடிங்!! இறுதி வாக்காளர் பட்டியலில் பெண் வாக்காளர்கள் அதிகம்!!

 
தமிழகம் முழுவதும் டிசம்பர் 9ம் தேதி இறுதி வாக்களர் பட்டியல் வெளியீடு!! நகர்ப்புற,  உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தம்!

தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள  மொத்த வாக்காளர்கள் பட்டியல் 
மொத்த வாக்காளர்கள் -6,20,41,179பேர். 
ஆண் வாக்காளர்கள் - 3,04,89,066 பேர்
பெண் வாக்காளர்கள் - 3,15,43,286 பேர்

தமிழக வாக்காளர் பட்டியலில் இந்தி மொழியில் அச்சான பெயர்கள்!! சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம்!!
மூன்றாம் பாலினித்தவர் - 8027
வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் - 3,310
18,19 வயதுக்குட்பட்டவர்கள் - 4,66,374 பேர்

தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பது குறித்த தகவல்களை சரிபார்க்க அதிகாரப்பூர்வ இணையதளமான  elections.tn.gov.in  மூலம்  தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில்,  மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி  வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்   அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில்  வெளியிட்டார்.

தமிழகத்தில் மே 2ம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை!சத்ய பிரதா சாகு உறுதி!

பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளித்த ஆட்சியர் பிரதீப் குமார்.....
 ஒன்பது சட்டமன்ற தொகுதியில் 23 லட்சத்து 10413 வாக்காளர்கள் உள்ளனர் .ஆண்கள்(1120158) பதினோரு லட்சத்து 20158 பேரும் பெண்கள்(1189933) 11 லட்சத்து 89 ஆயிரத்து 933 பேரும் உள்ளனர். இன்றைய தேதியில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2544. அதிகமான வாக்காளர்கள் கொண்ட தொகுதி ஸ்ரீரங்கம் 3,01,659 குறைவான வாக்காளர் கொண்ட தொகுதி லால்குடி 2,18,971 .புதிதாக 43,423 வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட 34,288 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய ராணுவத்தில் பணிபுரியும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள் 9 சட்டமன்ற தொகுதியில் 1376 இடம்பெற்றுள்ளனர் என குறிப்பிட்டார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web