பெண் வாக்காளர்கள் தான் அதிகம்!! கலெக்டர் பேட்டி!!

 
வாக்காளர் பட்டியல்

இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பது குறித்த தகவல்களை சரிபார்க்க அதிகாரப்பூர்வ இணையதளமான  elections.tn.gov.in  மூலம்  தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில்,  மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி  வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்   அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில்  வெளியிட்டார்.பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளித்த ஆட்சியர் பிரதீப் குமார்.....

வாக்காளர் பட்டியல்
 ஒன்பது சட்டமன்ற தொகுதியில் 23 லட்சத்து 10413 வாக்காளர்கள் உள்ளனர் .ஆண்கள்(1120158) பதினோரு லட்சத்து 20158 பேரும் பெண்கள்(1189933) 11 லட்சத்து 89 ஆயிரத்து 933 பேரும் உள்ளனர். இன்றைய தேதியில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2544. அதிகமான வாக்காளர்கள் கொண்ட தொகுதி ஸ்ரீரங்கம் 3,01,659 குறைவான வாக்காளர் கொண்ட தொகுதி லால்குடி 2,18,971 .புதிதாக 43,423 வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட 34,288 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய ராணுவத்தில் பணிபுரியும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள் 9 சட்டமன்ற தொகுதியில் 1376 இடம்பெற்றுள்ளனர் என குறிப்பிட்டார்.இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்  நவம்பர் 9ம் தேதி தொடங்கப்பட்டது.  அன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். நவம்பர் 9-ந் தேதி தொடங்கி டிசம்பர் 8-ந்தேதி வரை திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பம் பெறப்பட்டது. இந்த காலகட்டத்தில், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், ஆதார் விவரங்கள் அளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக வாக்காளர் பட்டியலில் இந்தி மொழியில் அச்சான பெயர்கள்!! சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம்!!

இந்த நிலையில், பணிக்கு செல்வோர் வசதிக்காக, கடந்த நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் அதாவது, நவ.12, 13 மற்றும் 26, 27 ஆகிய சனி, ஞாயிறு நாட்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பெயர் சேர்க்க படிவம் 6, வெளிநாட்டில் வசிக்கும் தமிழர் பெயர் சேர்க்க 6 ஏ, ஆதார் எண் இணைக்க 6 பி, பெயர் நீக்கத்துக்கு 7, தொகுதிக்குள் முகவரி மாற்றத்துக்கு படிவம் 8 ஆகியவை பெறப்பட்டன. அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இதுவரை பெயர் சேர்க்க மட்டும் 10 லட்சத்து 34 ஆயிரத்து 18 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர, பெயரை நீக்க 7,90,555 விண்ணப்பங்கள் என மொத்தம் 23,03,310 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web