இந்த ராசிக்காரங்களுக்கு இனி யோகம் தான்!!

 
ராசிபலன் rasibalan astrology rasi


 இன்று மார்கழி 16, டிசம்பர் 31, சனிக்கிழமை
திதி: நவமி  மாலை 06.33க்கு பின் வளர்பிறை தசமி.
நட்சத்திரம் :ரேவதி காலை  11.47க்கு பின் அஸ்வினி.
புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் :
காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எம கண்டம்:
பிற்பகல்  1.30 மணி முதல் 3மணி வரை 
குளிகன் :
காலை 6 மணி முதல் 7.30 மணி வரை 

ராசிபலன்

சுப ஹோரைகள்:


காலை 07 மணி முதல் 8 மணி வரை 
காலை 10.30 மணி முதல் 12மணி வரை 
மாலை 5 மணி முதல் 7 மணி வரை 
இரவு 9 மணி முதல் 10 மணி வரை 

மேஷம்

இன்று அனுகூலமான நாள்.  புதிய முயற்சிகளில் கவனம் தேவை. வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம். சுபகாரியங்களில் சிறு தடை உருவாகலாம். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் தொழிலில் எதிர்பார்த்த பணவரவு கிட்டும். நண்பர்களால் ஆதாயம் பெறலாம்.

ரிஷபம்

இன்று சுபமான நாள்.  உடன்பிறப்புக்களால்  அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் பெருகும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். அலுவலகத்தில் ஆதரவு பெருகும். தொழிலில் உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களால் எதிர்பார்த்த உதவி சரியான நேரத்தில் கிட்டும். 

மிதுனம்

இன்று மகிழ்ச்சியான நாள். இனிய செய்திகள் இல்லம் தேடி வரும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் அமோகமாக இருக்கும் .குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். சேமிப்புக்கள் அதிகரிக்கும். 

ராசிபலன்

கடகம்

இன்று விரயமான நாள். சிக்கனத்தை கடைப்பிடிப்பதால் பணத்தேவைகளை சமாளிக்கலாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் கொடுக்கல் வாங்கல்  திருப்திகரமாக இருக்கும். உடல் நலனில் அக்கறை அவசியம். தெய்வ வழிபாட்டின் மூலம் ஆதாயம் காணலாம்.

சிம்மம்

இன்று பிற்பகல் வரை சந்திராஷ்டமம்.இதனால் மனக்குழப்பம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள், புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். கடின உழைப்பிறகு பிறகே எதிர்பார்த்த பலன் கிட்டும்.  உடல் ஆரோக்கிய குறைபாடு காரணத்தால்  திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். 

கன்னி

இன்று நண்பகலுக்கு மேல் சந்திராஷ்டமம். பேச்சில் நிதானம் தேவை. வாகனப் பயணங்களில் எச்சரிக்கை அவசியம். சுப காரியம், புதிய முயற்சிகளை ஒத்தி வைக்கலாம். உறவினர்களால் வீண் சலசலப்புக்கள் உருவாகலாம். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும்.   குடும்பத்தில் கருத்துவேறுபாடுகள் ஏற்படும். உடல் நலனில் அக்கறை அவசியம். 

துலாம்

இன்று இனிய நாள். நினைத்த காரியம் நிறைவேறும். புதிய முயற்சிகளில் வெற்றி காணலாம். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரியம் கைகூடும். தொலை தூர செய்திகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் பெருகும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று சாதகமான நாள். புதிய முயற்சிகளில் உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிக்கனத்தை கடைப்பிடித்தால் விரயச் செலவுகளை தவிர்க்கலாம். உறவினர்களால் பிரச்சனைகள் உருவாகலாம். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் தொழிலில் முன்னேற்றம் உருவாகும்.  அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

தனுசு

இன்று சங்கடமான நாள். திடீர்  மருத்துவ செலவுகள் ஏற்படும். சுபகாரியங்களில் தடை ஏற்படலாம். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது உத்தமம். சிக்கனத்தை கடைப்பிடித்தால் தேவையற்ற பணப்பிரச்சனைகளை சமாளிக்கலாம். பேச்சில் நிதான தேவை. நண்பர்களால் குழப்பங்கள் உருவாகலாம். தெய்வ வழிபாட்டின் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். 

மகரம்

இன்று யோகமான நாள். பணம் பல வழிகளில் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.  அலுவலகத்தில் பதவி உயர்வு , பாராட்டுக்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சேமிப்புக்கள் உயரும். 

கும்பம்

இன்று சீரான நாள். வரவுக்கேற்ற செலவு நிச்சயம். உறவினர்களால் கருத்து  வேறுபாடுகள் தோன்றலாம். ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால்  அனுகூலமான பலன்களை பெறலாம் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் பெருகும்.

மீனம்

இன்று சந்தோஷமான நாள். பூர்வீக  சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.புதிய முயற்சிகள் கைகூடும். நண்பர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல் வாங்கல் எதிர்பார்த்த அளவு கிட்டும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web