யூ-ட்யூபர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்! அறிமுகமனாது புதிய கட்டுப்பாடு!

 
யூ-ட்யூப்

கையில தீப்பெட்டி சைஸுல ஒரு செல்போனை வெச்சுக்கிட்டு யூ-ட்யூபர்கள் செய்கிற அலப்பறைகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. தெருவுல 50 வாகனங்கள் சென்று கொண்டிருந்தால், அவற்றில் 30 வாகனங்கள் ‘ப்ரஸ்’ ஸ்டிக்கர்களோடு தான் வலம் வருகின்றன. இவற்றில் இருந்து தப்பினால், வட்டம், மாவட்டம், சதுரம், முக்கோணம் என்று விதவிதமான கலர்களில் கட்சி கொடிகளுடன் வலம் வருகிறார்கள். இதிலிருந்து தப்பித்தாலும் ஜாதி சங்கங்கள் அச்சுறுத்துகின்றன.

இந்நிலையில், மூணு முப்பது ரூபாய்க்கு என்றோ.. அரை கிலோ பிரியாணி 10 ரூபா தான் என்றோ யூ-ட்யூப்களில் உங்க இஷ்டத்துக்கு வீடியோவை பதிவேற்ற முடியாது. இணையதளங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகமாகியுள்ளன. உலகமே நவீனமயமாகிவிட்ட நிலையில் டிஜிட்டல் மோகம் அதிகரித்து வருகிறது. வீட்டில் இருந்த உணவு, பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஆடைகள் என அனைத்தையும் வாங்கும் நிலையில் மக்கள் உள்ளனர். இதனால் பல்வேறு நிறுவனங்கள் போட்டிபோட்டு விளம்பரங்கள், சலுகைகளை அள்ளிவீசுகிறது. ஆனால் இதனை பயன்படுத்தி சில நிறுவனங்கள் மோசடியாகவும்  மக்களை ஏமாற்றுகிறது. 

இந்நிலையில், சமூக ஊடகங்கள் வழியாக பொருட்களை புரமோட் செய்வது அதிகரித்து வரும் நிலையில், மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது.

money

அதன்படி, பிரபலங்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்குடன் இருப்பவர்கள் ஒரு நிறுவனத்தின் தயாரிப்பை புரமோட் செய்தால், அதற்கு கைமாறாக, பரிசு பொருட்கள், நிறுவனத்தில் பங்கு, இலவச பயணங்கள் என தாங்கள் பெறும் சலுகைகளை விளம்பர வீடியோவில் குறிப்பிட வேண்டும். தவறும்பட்சத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சில அறிவிப்புகள் வேகமாகவும், கண்களுக்கு தெரியாத அளவில் எழுத்துகளிலும் இருக்கும். ஆனால், புதிய விதிகள்படி இந்த விவரங்கள் அனைத்தும் எளிதில் புரியக்கூடிய தெளிவான மொழியில் இருக்க வேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விடாமல், பார்வை யாளர்கள் நிதானமாக படித்து தெரிந்து கொள்ளும் வகையில் நீண்ட நேரம் காட்டப்பட வேண்டும் என்று மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

money

இது குறித்து மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் செயலர் ரோஹித் குமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் நோக்கிலும், தவறான விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் புதிய நெறிமுறைகளைக் கொண்டு வந்துள்ளோம். நேரலை வீடியோவாக இருந்தால், அந்த வீடியோ முழுமைக்கும் அந்த விவரங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். எனவே, சமூக ஊடகங்களில் புரமோட் செய்பவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும், என்று தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web