10 அடி ஆழ குழிக்குள் பைக்குடன் தவறி விழுந்து இளைஞர் பலி!! அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் விபரீதம்!!

 
பொன் இருளப்பன்

விருதுநகர் மாவட்டத்தில் சஞ்சீவிநாதபுரத்தில் வசித்து வருபவர் 30 வயதான பொன்இருளப்பன். இவர் தனியார் ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகிறார்.  நேற்று இரவு பொன் இருளப்பன் நகருக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் டிபி மில்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.  சாலையின் நடுவில் குடிநீர் குழாயில் இருந்த கசிவை நீக்குவதற்காக 10 அடி ஆழத்தில் பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.

பொன் இருளப்பன்

இருட்டில் சென்ற பொன் இருளப்பன் சாலையின் நடுவே இருந்த அந்த பள்ளம் தெரியவில்லை. இதனால்  எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்துடன் தடுமாறி விழுந்துவிட்டார். இரவு நேரமானதால் அந்த பகுதியில்  ஆள் நடமாட்டம் இல்லை .இரவு முழுவதும் வீட்டிற்கு வராததால் அவரை உறவினர்கள் தேடி வந்த நிலையில் காலை 11 மணிக்கே அவர் சடலமாக குழிக்குள் கிடந்ததை கண்டறிந்தனர்.காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் பெரிய அளவிலான குழி இருப்பது குறித்து முறையான அறிவிப்பு பலகை எதுவும் வைக்கப்படாததே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ்

மேம்பாட்டு பணிகளுக்காக தோண்டப்படும் குழிகளை சுற்றி தடுப்பு பலகை அமைத்து, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  நேற்று இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றவர் சடலமாக குழிக்குள் கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி ஒரு ஆண்டே ஆன நிலையில் அவரது மனைவியும் குடும்பத்தினரும் கதறி துடித்த காட்சி காண்பவர்களை கண்கலங்க வைத்தது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web