'Z' பிரிவு பாதுகாப்பு!! கெத்து காட்டும் அண்ணாமலை!!

 
அண்ணாமலை

2020ல் பாஜகவில் இணைந்த அண்ணாமலை கடந்த ஆண்டு தமிழகத்தின்   பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதனாலேயே சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது.தற்போது ஆளும் திமுகவிற்கு எதிரான கருத்துக்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து மக்களிடையே பாஜகவை முன்னெடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.  

தமிழக அரசுக்கு எதிராக போராடும் பா.ஜ.க அண்ணாமலை..!!

இதனால் இவரது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு  Z பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது.  மத்திய உளவுத்துறை  கடந்த 2 நாட்களாக தமிழகத்திலேயே முகாமிட்டு அண்ணாமலைக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு குறித்தும் அவரது வீடு, தங்கும் இடங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்து வந்தது. மதவாதிகள், பிரிவினைவாதிகள்  தரப்பில் இருந்தும் மற்ற இடங்களில் இருந்தும் அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை  தகவல் அளித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு ஒரு காலம் வரும்: அண்ணாமலை

இதனையடுத்து  20க்கும் மேற்பட்ட கமாண்டோக்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அளிக்கவுள்ளனர் எனவும் அண்ணாமலை வீடு, அவர் தங்கும், செல்லும் இடங்களில் 24 மணி நேரமும் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு தருவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.மாவோஸ்டுகளிடமிருந்தும் மத தீவிரவாதிகளிடமிருந்தும் இவருக்கு மிரட்டல் வந்ததால் இந்த பாதுகாப்பு வழங்கி இருப்பதாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதற்கான ஓப்புதல் கையெழுத்தும் அண்ணாமலையிடம் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web