ஆம்புலன்சில் படுத்துக்கிட்டே பொதுத்தேர்வு !! 10ம் வகுப்பு மாணவியின் கண்ணீர் கதை!!

 
கூறினார்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பந்த்ரா பகுதியில் உள்ள அஞ்சுமன் ஐ இஸ்லாம் பள்ளியில் முபாஷிரா சாதிக் சையத் என்ற மாணவி படித்து வந்தார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது அறிவியல் முதல் தாள் தேர்வை முடித்துவிட்டு உற்சாகமாக வீடு திரும்பியுள்ளார். வழியில் சாலையைக் கடக்கும்போது ஒரு வாகனம் அவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மாணவி முபாஷிராவுக்கு இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அன்றைய தினமே அவருக்கு காலில் அறுவை சிகிச்சையும் செய்யவேண்டியிருந்தது. அதன்படி ஆபரேஷன் செய்யப்பட்டது.ஆனால் ஆபரேஷனுக்கு முன்பாக தனது பள்ளி ஆசிரியர்களிடம் தொடர்ந்து பேசிய மாணவி முபாஷிரா, தான் விபத்தில் சிக்கினாலும் அடுத்த தேர்வில் பங்கேற்க விரும்புவதாகக் கூறிவந்தார். இது குறித்து ஆசிரியர்கள் தேர்வுதுறைக்கு தகவல் தெரிவித்தது.

முபாஷிரா சாதிக் சையத்

பின்னர் இது குறித்து, விபத்து அவரது தேர்வு மையமான செயின்ட் ஸ்டானிஸ்லாஸ் உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் நடந்தது. நாங்கள் பள்ளி முதல்வரைத் தொடர்புகொண்டோம். அவர்கள் உடனடியாக மாணவியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், என தேர்வு மையத்தின் பாதுகாவலர் சந்தீப் கர்மாலே கூறினார்.

பள்ளியின் முதல்வர் சபா படேல் மருத்துவமனைக்குச் சென்று முபாஷிரா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். முபாஷிரா படிப்பில் சிறந்த மாணவி என்பதால், மீதமுள்ள அனைத்து தேர்வுகளையும் எழுதுவாள் என்று ஆசிரியர்கள் அனைவரும் நம்பிக்கை தெரிவித்தனர். அதன்படி தேவையான ஏற்பாட்டைச் செய்யத் தொடங்கினோம், என்று மாணவியை சந்தித்த பின்னர் கூறினார்.

முபாஷிரா சாதிக் சையத்

இவ்வளவு பரிந்துரைக்கும் பிறகு தேர்வு வாரியச் செயலர் சுபாஷ் போராஸும் மாணவி முபாஷிரா தேர்வை ஆம்புலன்சில் வைத்தே எழுத அனுமதித்தார். அதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அனுமதி பெற்ற பிறகு, சில ஆசிரியர்கள் சனிக்கிழமை மாணவியின் வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அப்போதும் ​அவள் தேர்வுக்குத் தயார்செய்து கொண்டிருந்தார். . அதன்படி அவர் ஆம்புலன்சில் இருந்து தேர்வுக்கு அனுமதித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web