மாரடைப்பால் 13 வயது பள்ளி மாணவி பலி... தொடரும் சோகம்!

 
சிக்மகளூரு

சமீபகாலமாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மாரடைப்பால் பலியாகி வருவது அதிகரித்து வருகிறது. கொரோனா காலகட்டத்திற்கு இந்த திடீர் மரணங்கள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நடனம் ஆடிய போது மயங்கி சரிந்து மரணம், நடந்து வரும் போது திடீர் மரணம், உடற்பயிற்சியின் போது மரணம், ஓட்டப்பந்தயந்தில் மரணம் என இளவயது மரணங்கள் பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

மாரடைப்பு

கர்நாடகா மாநிலம், சிக்மகளூருவில்  தாரதஹள்ளி ஆரம்பப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருபவர்  ஹத்தாத். இவருக்கு வயது 13.  வழக்கம் போல்  இன்று காலை பள்ளிக்குச் சென்ற சிறுமி செல்லும் வழியில் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்தார்.  அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக  அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

சிறுவன் பலி


 அவரை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தாரதஹள்ளி ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு மருத்துவர் யாரும் இல்லை எனத் தெரிகிறது.   இதனால் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மாணவி ஹத்தாத் பரிதாபமாக உயிரிழந்து விட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இருந்திருந்தால், மாணவியின் உயிரை ஒருவேளை  காப்பாற்றி இருக்கலாம் என சிறுமியின் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.   7ம் வகுப்பு மாணவி  மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web