பாயாசத்தில் தூக்க மாத்திரை கலந்து பாட்டிக்கு கொடுத்த 14 வயது சிறுமி!
சென்னை அயனாவரத்தில் தனியாக வசித்து வந்த மமலாபி (75) என்ற மூதாட்டியின் வீட்டில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேல் தளத்தில் வசித்த பாட்டியிடம், கீழ்தளத்தில் வாடகைக்கு இருந்த பத்ருன்னிஷா பேகத்தின் 14 வயது மகள், “பாயாசம் செய்து தரட்டுமா?” எனக் கேட்டுள்ளார். சிறுமி ஆசையாக கேட்பதால் சம்மதித்த பாட்டி, அந்த பாயாசத்தை குடித்ததும் மயக்கமடைந்தார்.

மறுநாள் காலை கண் விழித்தபோது, கழுத்தில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு பாட்டி அதிர்ச்சி அடைந்தார். போலீசில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. விசாரணையில் தாய், மகள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். குடும்ப கடனை அடைக்க, பாட்டிக்கு தூக்க மாத்திரை கலந்த பாயாசம் கொடுக்க தாய் திட்டமிட்டது தெரிய வந்தது.

மயக்கத்தில் இருந்த பாட்டியின் 10 சவரன் நகைகளை கழற்றி, அதை அடகு வைத்து கடன் தீர்த்துள்ளனர். மீதமிருந்த பணமும், நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாயை போலீசார் சிறையில் அடைத்தனர். 14 வயது சிறுமி சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அரசு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். தனியாக வசிக்கும் முதியவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
