அரசு பள்ளி கட்டுமான பணியின் போது 2வது மாடியில் இருந்து விழுந்து 15 வயதுச் சிறுவன் பலி!
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்று வந்த மாநகராட்சிப் பள்ளி கட்டுமானப் பணியின்போது, 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன், தலையில் பலத்தக் காயமடைந்துப் பரிதாபமாக உயிரிழந்தான். இந்தக் கோர விபத்து குறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை எம்.ஜி.ஆர். நகர், காமராஜ் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில், புதிய கட்டிடம் கட்டும் பணி தரைதளம் மற்றும் 2 அடுக்குகளுடன் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆஷிஷ் பேரா என்பவர், தனது மகன் சவ்மென் பேரா (15) உடன் அங்கேயே தங்கிப் பணி செய்து வந்தார். நேற்று மாலை, தந்தையும் மகனும் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிறுவன் சவ்மென் பேரா அங்கு போடப்பட்டிருந்த சாரத்தின் மீது நின்று கொண்டுப் பலகையை எடுக்க முயன்றார். பலகையை எடுக்கும் முயற்சியில் எதிர்பாராத விதமாகச் சிறுவன் சவ்மென் பேரா இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில், தலையில் பலத்தக் காயமடைந்த சவ்மென் பேராவை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் சவ்மென் பேரா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கட்டுமானப் பணியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
