17 வயது மாணவியைக் கடத்திப் பாலியல் பலாத்காரம்... கட்டிடத் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

 
இன்ஸ்டா மாணவி

மானாமதுரை பகுதியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கட்டிடத் தொழிலாளி ஒருவருக்கு, சிவகங்கையில் உள்ள போக்ஸோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

சிறுமிக்கு பாலியல் சீண்டல்

மதுரை திருமோகூர் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ராஜ்குமார் (35), 2017-ஆம் ஆண்டு மானாமதுரை பகுதியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியுடன் செல்போனில் பேசிப் பழகி வந்துள்ளார். பின்னர், 2017 மார்ச் மாதம் அந்தச் சிறுமியைக் கடத்திச் சென்று, கொடைக்கானல் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், மூன்று நாட்களுக்குப் பிறகு போலீசார் அந்தச் சிறுமியை மீட்டனர். இதனையடுத்து, மானாமதுரை சிப்காட் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் ராஜ்குமார் மற்றும் அவருக்கு உதவிய அவரது உறவினர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிவகங்கையில் உள்ள போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

இந்த வழக்கு விசாரணைக்குப் பின்னர், நீதிபதி கோகுல் முருகன் நேற்றுத் தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு உறவினர் விடுதலை செய்யப்பட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!