நாட்டு வெடிகுண்டு வெடித்து 20 வயது இளைஞர் பலி!
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம், கஸ்தூரிபாத் கிராமத்தைச் சேர்ந்த ஆய்தா குஹ்ரமி (20), ஞாயிற்றுக்கிழமை அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நக்சல்களால் புதைத்த வானத்து நாட்டு வெடிகுண்டை தெரியாமல் மிதித்தார்.
வெடிகுண்டு வெடித்ததில் அவரது கால்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரும் உயிர் காப்பாற்ற முடியவில்லை என அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் மேலும் நாட்டு வெடிகுண்டுகள் உள்ளதா என பாதுகாப்புப் படையினர் தேடல் நடவடிக்கை தொடங்கியுள்ளனர்.

பொது பாதுகாப்புக்காக வனப்பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு செல்லும் கிராமவாசிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது செயல்பாடுகள் கண்டறியப்பட்டால் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது பாதுகாப்பு முகாமுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
