2 வயது குழந்தை பலாத்காரம், கொலை... குற்றவாளியின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார் - மரண தண்டனை உறுதி
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இரக்கமற்றக் குற்றவாளி ரவி அசோக் குமாரே (35), 2 வயது குழந்தையைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தக் கொடூரச் செயலுக்காக விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி அளிக்கப்பட்ட கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். இதனால், அந்தச் சிறு குழந்தைக்கு அநீதி இழைத்த குற்றவாளிக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரவி அசோக் குமாரே மீதான இந்தச் சம்பவம் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்தது. இந்த வழக்கில், அவருக்கு 2015 ஆம் ஆண்டு கீழ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. கீழ் நீதிமன்றத்தின் இந்தத் தூக்கு தண்டனையை மும்பை உயர் நீதிமன்றமும், அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகக் குறைந்தபட்சத் தண்டனை வழங்க வேண்டும் என்று ரவி அசோக் குமாரே, குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுவை அனுப்பியிருந்தார். அந்தக் கருணை மனுவை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், அந்தக் கொடூரக் குற்றவாளியின் மரண தண்டனை உறுதி ஆகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
