உசுருக்கு போராடிய 3 மாத குழந்தை … ரூ.18 லட்சத்தை யோசிக்காமல் கொடுத்த விஜய்… புஸ்ஸி ஆனந்த் உருக்கம்…!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடிகர் விஜய் 3 மாத குழந்தையின் உயிரை காப்பாற்றியதாக செய்தியை தெரிவித்துள்ளார். இது குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் 3 மாதக் குழந்தைக்கு நள்ளிரவில் உடல்நிலை மோசமடைந்த நிலையில், 17 முதல் 18 லட்சம் ரூபாய் வரை மருத்துவச் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு கூலித் தொழிலாளி என்பதாலும், அவருக்குப் பெரிய மருத்துவமனையில் செலவுகளை ஏற்க இயலாத நிலை இருந்தாலும், திடீரென இந்த விஷயம் தமிழ் நடிகரும் TVK இயக்க தலைவர் தளபதி விஜயின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவருடைய நம்பிக்கையாளரை அனுப்பி, மருத்துவமனையில் நேரடியாக பணம் செலுத்தி குழந்தையின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கச் செய்தார்.
“நான் கொடுத்ததை யாரும் தெரிந்து கொள்ள வேண்டாம். அந்த பெற்றோருக்கு மட்டும் தெரிந்தாலே போதும்” எனும் சொற்கள் அவரது எளிமையும், உண்மையான சேவை மனப்பான்மையும் நிரூபிக்கின்றன. “ஒரு லட்சம் 2 லட்சம் அல்ல, பல லட்சம் செலவாகினாலும் குழந்தையின் உயிர் முக்கியம்” எனக் கூறியுள்ளார். மேலும் செலுத்தப்பட்ட தொகை குறித்த எந்த புகழும், புகழாரம் வேண்டாம் என்றும், புகைப்படங்கள் எடுத்துப் பகிர வேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.
இந்த மனிதநேய செயல் மூலம் தளபதி விஜய் எப்போதும் மக்கள் பக்கம் நிற்கும் ஒரு உண்மையான தலைவராகவே இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறார். அந்தக் குழந்தைக்கு தளபதி யார் என்றே தெரியாது எனில் அவரது கருணை செயலால் அந்தக் குடும்பம் நன்றியும் வாழ்வும் பெற்றுள்ளது. இதனை பகிர்ந்த அவருடைய இயக்கத்தின் நிர்வாகி ஒருவர், “தளபதியின் அறிவுறுத்தலின் படி எங்கள் செயல்கள் நடைபெறுகின்றன” என பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு தெரியாமல் வாழ்வின் முக்கியமான தருணங்களில் அவசர உதவிகளை வழங்கும் தளபதி விஜய் போன்ற தலைவர் இன்று தமிழகத்தில் இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கே பெருமையான உணர்வாகும் என கூறினார். நடிகர் விஜய் குறித்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இதனை ரசிகர்களும் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகளும் பாராட்டி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!