தாய் அடித்ததில் 3 வயது ஆண் குழந்தை பலி!!

 
குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி சன்னதி தெருவில்  வசித்து வருபவர் 38 வயது  சதீஷ். இவர்  லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி 32 வயது  செல்வி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள். இதில் 3 வது இளையமகன் கிஷோரின் வயது  3.  கிஷோர் வீட்டில் உள்ள படிக்கட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து விட்டான். இதனால் செல்வி திட்டி வீட்டிற்குள் வந்து விளையாடும்படி கண்டித்துள்ளார்.

திருத்தணி

ஆனால்  கிஷோர் கேட்காமல் மறுபடியும் விளையாட்டாக படியில் ஏறி சேட்டை செய்துள்ளான். ஆத்திரம்அடைந்த செல்வி கம்பால் குழந்தை கிஷோரை முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்துள்ளார்.  அடிதாங்காமல் கிஷோர் மயங்கி விழுந்தான். அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினர். முதலுதவிக்கு பின் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனை குழந்தை

குழந்தைக்கு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் கிஷோர்  சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சொல்பேச்சு கேட்காத குழந்தையை தாய் அடித்ததால் குழந்தை உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web