தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் பலி?... கதறித் துடிக்கும் தாய்!

 
ரோஹித்

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மாலிவாக்கம் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர்  ராஜேஷ் மற்றும் நிர்மலா தம்பதியினர். இவர்களது மகன் 4 வயது  ரோகித் .  அவருக்கு கடந்த 2 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது.  அயனாவரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெறுவதற்காக செவ்வாய்க்கிழமை காலை சிறுவன் ரோகித்தை உள்நோயாளியாக அனுமதித்துள்ளனர். இதற்காக பல லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தியிருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ரோஹித்
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 18ம் தேதி மாலை தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர் ஒருவர் வீடியோ அழைப்பு மூலம் சிறுவனுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. சிகிச்சையின்போது திடீரென சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு குவிந்ததை தொடர்ந்து, அயனாவரம் காவல்துறையினருக்கு மருத்துவமனை தரப்பில் தகவல் அளிக்கப்பட்டது.  மருத்துவமனையில் இருந்து உறவினர்கள் கலைந்து செல்லும்படி  போலீசார் மிரட்டும் தோரணையில் பேசியதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.  

ஆம்புலன்ஸ்


சில மணிநேரம் வாக்குவாதத்துக்கு பிறகு, நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும்  சமரசம் எட்டப்படவில்லை எனில்  மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து, சிறுவனின் உடலை குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். சிறுவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அயனாவரம் பகுதியில்  பரபரப்பான சூழல் நிலவியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web