தனியார் பள்ளியில் 4 வயது சிறுமி தாக்கப்பட்ட கொடூரம்... பகீர் சிசிடிவி காட்சிகள் !
ஹைதராபாத் ஜீடிமெட்லா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், நர்சரி மாணவி (4) ஒருவர் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் சமூகத்தை உலுக்கியுள்ளது. பெற்றோர் சந்தேகத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை தொடங்கி, சம்பந்தப்பட்ட பெண் உதவியாளர் லட்சுமியை கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் சிசிடிவி காட்சிகள், இந்த வழக்கை மேலும் தீவிரமாக எடுத்துக்காட்டுகின்றன. அதில், சிறுமி தரையில் தள்ளப்பட்டதும், தலையில் பலமுறை அடிபட்டதும், மேல் தள்ளப்பட்டதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சி பெற்றோர்களிடம் மட்டுமல்லாமல் முழு நகரத்திலும் அதிர்ச்சியூட்டிய நிலையில் உள்ளது.

விசாரணையில், தாக்குதல் சாதாரண கோப வெளிப்பாடு அல்ல, திட்டமிட்ட செயல் என்றும் போலீசார் கருதுகின்றனர். சிறுமியின் தாயும் அதே பள்ளியில் பணியாற்றி வந்ததால், வேலை தொடர்பான மனக்கசப்பு இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருக்கலாம் என புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். சம்பவம் வெளிச்சம் கண்டதையடுத்து, பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
