1 கோடி காப்பீட்டு பணத்துக்காக வங்கி ஊழியர் கொடூரக் கொலை செய்து மரண நாடகம்…!

 
கொடூரம்
 

 

மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூரில் வங்கியின் நிதி வசூல் ஊழியராக பணியாற்றிய கணேஷ் சவான், காப்பீட்டு பணத்தைப் பெறுவதற்காக தன்னை இறந்ததாக காட்ட முயன்ற அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. ₹1 கோடி ஆயுள் காப்பீட்டு தொகையைப் பெற்று வீட்டுக் கடனை அடைப்பதே அவரது நோக்கம். அதற்காக ஒரு மனித உயிரையே பலி கொடுக்க அவர் தயங்கவில்லை.

ஆம்புலன்ஸ்

திட்டமிட்டபடி, கோவிந்த் யாதவ் என்பவரை காரில் லிஃப்ட் கேட்டு வந்தபோது ஏற்றிச் சென்ற சவான், வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். மதுபோதையில் உறங்கிய யாதவை ஓட்டுநர் இருக்கையில் அமர வைத்து, சீட் பெல்ட் அணிவித்தார். தனது கைச் சங்கிலி உள்ளிட்ட பொருட்களை யாதவ் கையில் அணிவித்து, காருக்கு தீ வைத்துவிட்டு தப்பினார்.

எரிந்த காரில் கிடைத்த சடலம் சவானுடையதே என முதலில் போலீசார் கருதினர். ஆனால், விசாரணையில் அவர் பெண் தோழிக்கு வேறு எண்ணிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்தது. செல்போன் சிக்னல் மூலம் கோல்ஹாபூர் வழியாக விஜய்துர்க் சென்ற சவானை போலீசார் கைது செய்தனர். காப்பீட்டு பணத்துக்காக யாதவை கொன்றதை ஒப்புக்கொண்ட நிலையில், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!