வீட்டுக்குள் வந்து சாப்பிட்டு ஹாயாக ரெஸ்ட் எடுத்த கரடியார்!! அலறி அடித்து ஓட்டம் பிடித்த பொதுமக்கள்!!

 
கரடி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவார உள் கோம்பை பகுதியில் சிறிது சிறிதாக சில கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கிராமத்தில் மாரிமுத்து என்பவர் விவசாயம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

மாரிமுத்து வழக்கமாக காலை எழுந்ததும் அவரது மனைவி மற்றும் மகன் உள்ளிட்டோருடன் தங்களது விவசாய தோட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது கரடி ஒன்று வனப்பகுதியில் இருந்து இறங்கி வந்து விவசாயி வீட்டை நோக்கி ஓடி சென்றுள்ளது.

கரடி

அதனை கண்டு அதிர்ந்து போன விவசாயி மாரிமுத்து, வீட்டின் வெளியே சமைத்துக் கொண்டு இருந்த தமது மனைவிக்கு கரடி குறித்து குரல் கொடுத்துள்ளார். கரடியை பார்த்த அவரும் அச்சத்தில் அப்படியே விட்டுவிட்டு தோட்டத்துப் பகுதிக்கு ஓடி வந்து உயிர்த்தப்பினார்.விவசாயி வீட்டிற்கு வந்த கரடி அவரது வீட்டிற்குள்ளேயும் நுழைந்தது. அப்போது வீட்டின் முன்பு இருந்த நாய் ஒன்று அந்த கரடியை கண்டு குறைத்ததால் அதனை தாக்கி விட்டு கரடி உள்ளே சென்றது. பின்னர் அது உள்ளே இருந்த உணவு பண்டங்களை தின்றுவிட்டு பதுங்கிக் கொண்டது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி மாரிமுத்து உடனடியாக ஆண்டிப்பட்டி வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்தனர்.அவர்கள் உடனடியாக வீட்டிற்குள் இருக்கும் அந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சி செய்தனர். ஆனால் வீட்டிற்குள் இருந்த கரடி வெளியே வரவில்லை. வனத்துறையினர் மேற்கொண்ட அனைத்து முயற்சியும் தோல்விதான் அடைந்தது.பின்னர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவர் வரவழைக்கப்பட்டார்.

கரடி

அதன்படி கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி, சிறிது நேரத்தில் மயக்கமடைந்த பிறகு கரடியை பிடித்தனர். இதனையடுத்து கூண்டில் அடைத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடுவித்தனர். விவசாயி வீட்டிற்குள் கரடி புகுந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அக்கம் பக்கத்தினர் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.மூன்று அடி உயரமுள்ள பெண் கரடிக்கு 17 வயது இருக்கும். கூண்டு வைத்தபோதும் அதில் ஏறாமல் வீட்டைவிட்டு வெளியேற மறுத்தது. இதனால் 8 மணிநேரம் கரடியைக் கூண்டுக்குள் ஏறவைக்க போராடினோம். கூண்டுக்குள் சிக்கியதை அடுத்து கம்பிகளை கடித்தும், கால்களால் உதைத்தும் வெளியேற முயன்றது என வன அலுவலர் தெரித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web