சிவன் கோயிலுக்குள் நுழைந்த கரடி... பெரும் பரபரப்பு!
நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் ஊடுருவும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உதகையில் கரடி ஒன்று நுழைந்ததால் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கரடியின் திடீர் தோற்றத்தால் பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்தனர்.
உணவு தேடி வந்ததாகக் கருதப்படும் அந்த கரடி, அப்பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்குள் நுழைந்து சில நிமிடங்கள் அங்கிருந்தது. பின்னர் கோவிலில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பாட்டிலை வாயில் பிடித்துக் கொண்டு, தடுப்புச் சுவரை தாண்டி மீண்டும் வனப்பகுதியை நோக்கி ஓடிச்சென்றது. இந்த காட்சி அங்கிருந்தவர்களின் மொபைல் போன்களில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது.
கரடியின் இந்த அசாதாரண நடமாட்டம் காரணமாக, அப்பகுதி மக்கள் அதிக அச்சத்தில் உள்ளனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நுழையும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
