நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த படகு… கடலில் குதித்து தப்பிய மீனவர்கள்!

 
படகு
 

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சேர்ந்த மீனவர்கள், இன்று அதிகாலை பைபர் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பைபர் படகில் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உயிர் காக்க கடலில் குதித்தனர்.

தீப்பற்றியதை பார்த்த அருகிலிருந்த மற்றொரு படகில் வந்த சக மீனவர்கள், கடலில் குதித்த அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். அப்போது, தீயை அணைக்க முயன்ற ஜெகன் என்ற மீனவரின் கையில் தீக்காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக கரைக்கு அழைத்து வரப்பட்ட ஜெகன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நடுக்கடலில் நடந்த இந்த சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!