திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் !
திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு இன்று (டிச.11) மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. நேற்று வந்த மின்னஞ்சலும் பொய்யானது என போலீசார் உறுதி செய்த நிலையில், தொடர்ந்து இன்று மீண்டும் மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தர்கா பகுதியில் விரைந்து சென்றனர். முழு பரப்பிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. எந்தவித வெடிகுண்டும் இல்லை என போலீசார் உறுதி செய்தனர். மிரட்டல் காரணமாக மலைப் பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கார்த்திகை தீபம் தொடர்பாக நீதிபதி உத்தரவால் மலைப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக மலைமேல் யாருக்கும் அனுமதி இல்லை. இந்த நிலையில் தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் போலீசை மேலும் எச்சரிக்கையுடன் செயல்பட வைத்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
